Header Ads



ஹிஸ்புழ்ழாஹ் கண்டனம்


புனித இஸ்லாம் மதத்தினையும் எம் பெருமானர் (ஸல்) அவர்களையும் இழிவு படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் (பா.உ) அவர்கள் தமது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மேற்கத்திய நாடுகளின் இஸ்லாம் மதத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக இது போன்ற தொடர்ச்சியான காழ்புனர்ச்சிகளை இஸ்லாத்திற்கு விரோதமான விஷமிகள் மேற்கொண்டு வருவதை முஸ்லிம்களாகிய நாம் இனியும் பொறுத்திருக்க முடியாது. இத்தகைய இழி நிலையை திரைப்படத்தின் மூலம் தயாரித்த இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இத்திரைபடத்தை வெளியீடு செய்ய உதவிய அனுசரனையாளர்கள் மற்றும் இத்திரைப்படம் காட்சியினை ஒளிபரப்பிய ஊடகங்கள் இவை அனைத்துக்கும் எதிரான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பகிரங்கமாக இவர்கள் தண்டிக்கபட வேண்டும் என்பதுடன் இத்தகையோர்களுக்கு வழங்கும் தண்டனைகள் இனி வரும் காலங்களில் இஸ்லாத்துக்கும்  இஸ்லாமியர்களுக்கும் எதிராக சதி திட்டங்களை மேற்கொள்ள காத்திருக்கும் அனைவருக்கும் இது ஒரு சாட்டை அடியாக அமையும் என்பதுடன் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபட்டோர்கள் உடன் தண்டிக்கப்படாதவிடத்து தொடர்ந்தும் உலக முஸ்லிம்களின் ஆக்ரோஷமான போராட்டங்கள் ஓயப் போவதில்லை எனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதியமைச்சர் ஊடகப் பிரிவு
     


No comments

Powered by Blogger.