Header Ads



தென்கொரியாவில் ஆசிரியர் பயிற்சி - பொத்துவில் ஆசிரியரும் கலந்து கொண்டார் (படம்)


எஸ்.எல். மன்சூர்

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிலுள்ள பொத்துவில் மத்தியகல்லூரியின் ஆசிரியர் ஏ.எல். அனீஸ் அலி கொரியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் கொய்க்கா(முழiஉய) திட்டத்தின் ஒருகட்டமாக அந்நாட்டின் தலைநகரான சியோலில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் ஒருவாரகால ஆசியர் வாண்மைத்துவப் பயிற்சியில் கலந்துகொண்டார். 

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து இவ்வாசிரியர் மாத்திரமே மேற்கொண்டிருந்ததுடன் இலங்கையிலிருந்து சென்ற 20பேரில் இவரும் ஒருவராவார். இவர் தென்கொரிய பயிற்சியின்போது ஹையுண்டாக கார் உற்பத்தி நிறுவனம், பொஸ்கோ உருக்கு நிறுவனம் மற்றும் றோபோ நிறுவனம் போன்றவைகளையும் பார்வையிட்டிருந்தார். கொய்க்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று வலயத்திலுள்ள பொத்துவில் மத்திய கல்லூரியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





1 comment:

Powered by Blogger.