Header Ads



கிண்ணியாவில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு )


மௌலவி.எம்.ஏ.முஹம்மது றபீஸ்

எம் உயிரினிலும் மேலான நபி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களை நிந்தித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து கிண்ணியா மக்கள் மாபெரும், வரலாறு காணாத கண்டப் பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்தினர். இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட இக்கூட்டம் மிகவும் ஒழுக்கமாகவும் அமைதியாகவும் நடைபெற்றது. கிண்ணியா நகர சபை மைதானத்தில் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதோடு வானதிரும் கோஷங்களும் எழுப்பப்பட்டன. கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா மற்றும் முன்னனி தஃவா இயக்கங்கள் பல இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.








No comments

Powered by Blogger.