பல்கலைக்கழக விரிவுரையாளர் பணிபகிஷ்கரிப்பு - ஒவ்வொரு நாளும் ஒருகோடி ரூபா நஷ்டம்
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளாந்தம் நாட்டிற்கு சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான இழப்புக்கள் ஏற்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விரிவுரையாளர்கள் கடந்த மூன்று மாதகாலமாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் இடம்பெறாமல் விரிவுரையாளர்களுக்கும் கல்விசார ஊழியர்களுக்கும் சம்பளம் செலுத்தப்படுவதுடன் மின்சாரம் நீர் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காகவும் கட்டணம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் விரிவுரையாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டிற்கும் மாணவர்களுக்கும் ஏற்படுகின்ற இழப்பினை எவராலும் ஈடுசெய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைக்கு தீர்வு சொல்லாம சும்மா செய்தியாளர் மாநாடு நடத்தி இன்னும் பல கோடிகளை நட்டப்படுத்துராங்க
ReplyDelete