Header Ads



துருக்கி - குர்தீஷ்தான் மோதல் - 30 பேர் மரணம்

 
துருக்கியின் பாதுகாப்புப்படையினர் மீது குர்தீஷ் இனத்தவர்கள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியாயினர்.
 
துருக்கியின் தென்கிழக்கே, ஈராக்கை ஒட்டியுள்ள பகுதிகளில் குர்தீஷ் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் துருக்கி நாட்டிற்கு எதிராக ‌உள்நாட்டு போரினை நடத்தி வருகின்றனர். நேற்று சிமாக் மாகாணத்தில் குர்திஷ் தொழிலாளர்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் பாதுகாப்புப்படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.இதற்கு துருக்கி பாதுகாப்புப்படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதம் எதிர்படையினர் என 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கு துருக்கி பிரதமர் ரீசெப் தைப்பி ஈர்டோஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரிய கிளர்ச்சியாளர்கள் துணையுடன் இத்தாக்குதல் நடந்துள்ளது. தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

 

2 comments:

  1. சிரிய கிளர்ச்சியாளர்களின் துணையுடன் இத்தாக்குதல் நடத்தப் பட்டிருக்க வாய்ப்பில்லை. சிரிய புரட்சிக்கு துருக்கி தார்மீக ஆதரவு வழங்கி வரும் இவ்வேளையில், ஷீயாக்களைத் தவிர, வேறு யாருக்குத்தான் இத்தாக்குதல்கள் லாபத்தைத் தர முடியும்?

    ReplyDelete
  2. மனிதன் தனக்கு தானே எல்லைகளை போட்டுக் கொண்டு ஒரே இனத்தவர்களை அழித்துக் கொண்டிருக்கிறான்.
    இதற்கு சுன்னி,ஷியா,குர்திஸ் இன்னும் பல பெயர்களில் பிரிந்து புளங்காகிதம் அடைந்து பெருமை பேசிக் கொண்டு
    யூதனுக்கும்,கிறிஸ்தவனுக்கும் அடிமையாக இருக்கிறோம்.முஸ்லிம் அல்லாதவர்களை உற்ற தோழர்களாக
    ஆக்கிக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ்வும்,ரசூலும் அறிவுறுத்தியும் நாம் எப்படி வாழ்கிறோம்

    ReplyDelete

Powered by Blogger.