அணிசேரா மாநாட்டில் பணம் உழைத்த ஈரான்
ஈரானில் நடந்த, அணி சேரா நாடுகளின் மாநாட்டினால், அந்நாட்டுக்கு ஐந்து கோடி அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே, ஈரானில் அணிசேரா நாடுகளின் மாநாடு நடந்தது. 50க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த தலைவர்கள், இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். மாநாட்டில் பங்கேற்க வந்த தலைவர்களும், அவர்களது உதவியாளர் மற்றும் அதிகாரிகளும்ல டெஹ்ரான் நகரின் ஓட்டல்களில் தங்கினர்.
சம்பந்தப்பட்ட தூதரகங்கள், இந்த விஷயத்தில் முடிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஈரான் அரசு குறிப்பிட்ட ஓட்டல்களில் தான், வெளிநாட்டுத் தலைவர்கள் தங்கினர். மாநாட்டையொட்டி, ஒரு நாள் ஓட்டல் அறை வாடகை, 110 டாலருக்கு பதில், 400 டாலர் வரை வசூலிக்கப்பட்டது. வழக்கமாக, ஒரு உணவுக்கு, 15 அமெரிக்க டாலர் வசூலிக்கப்பட்டது. மாநாட்டையொட்டி, இந்த உணவு விலை, 70 டாலர் வரை உயர்த்தப்பட்டது. சாதாரணமாக ஒரு ஆலோசனைக் கூடத்துக்கு, 1,000 டாலர் வசூலிக்கப்படும். ஆனால், வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்ற ஓட்டல்களில், 10 ஆயிரம் டாலர் வரை, வசூலிக்கப்பட்டது. இந்த வகையில், ஈரான் அரசுக்கு, ஐந்து கோடி அமெரிக்க டாலர்கள், வருவாய் கிடைத்துள்ளதாக, அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

சோழியன் குடுமி சும்மா ஆடாது. ஆரியக் கூத்தாடினாலும், ஷீயாக்காரன் காரியத்தில் கண்ணாயிருக்கின்றான்.
ReplyDelete