முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீது பேரினவாதம் ஊழிக் கூத்தாடி வருகின்றது
கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை. அதனால் தான் ஒரு வருட காலத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையை அவர் கலைத்து விட்டார் ௭ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை வை.௭ம்.சீ.ஏ.மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்கள் அன்று காரியப்பர் தொடக்கம் செனட்டர் மசூர் மௌலானா வரை தமிழரசுக்கட்சி மேடைகளில் ஒரு முஸ்லிமாவது இல்லாதிருப்பது கிடையாது. இன்று கிழக்குத் தேர்தலில் நம் கூட்டமைப்பு சார்பில் முஸ்லிம் ஒருவர் போட்டியிடுவது பெரும் மன மகிழ்வைத் தருகின்றது. நல்ல சகுனம் தோன்றியுள்ளது.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகள் சோதனைகள் இன்று முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்டுள் ளன. தம்புள்ளை பள்ளிவாசலில் தொடங்கி ராஜகி ரிய வரைக்கும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீது பேரினவாதம் ஊழிக் கூத்தாடி வருகின்றது. தந்தை செல்வா முதல் தமிழர் தலைமைகள் முஸ்லிம் மக்களை ஒரு போதும் புறக்கணித்து நடக்கவில்லை.

கிழக்கில் ஒரு சபையல்ல. இரு சபைகள் தேவைப்பட்டால் மூன்று சபைகள் அமைக்கலாமென முஸ்லிம் மக்களையும் உள்ளடக்கி அன்று தந்தை செல்வா தீர்க்க தரிசனமாகக் கூறினார். பேரினவாத அரசுகளால் 1949 களில் கல்லோயா திட்டத்தைக் கொண்டு வந்து சிங்களக் குடியேற்றங்களைச் செய்ய முற்பட்ட போது சம்மாந்துறை முஸ்லிம் தலைவர்களை அண்ணன் அமிர்தலிங்கம் கண்டு கதைத்து இத்திட்டத்தில் அரைவாசி தமிழ் பேசும் மக்கள் குடியேற்றப்பட வேண்டுமென்பதை நெறிப்படுத்தினார்.
அன்று புத்தளம் பள்ளிவாசல் பிரச்சினையில் முஸ்லிம் அமைச்சர்களிலிருந்தும் அதற்காகக் குரல் கொடுத்தது தமிழ்த் தலைவர்கள் தானென்பதையும் முஸ்லிம் மக்கள் ௭ளிதில் மறந்து விட முடியாது. இந்நிலையில் முஸ்லிம் மக்களும் கிழக்கில் அரசை ஆதரிக்கவில்லையென்ற உண்மையைத் தேர்தலின் பின்னரும் நிரூபிக்க முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும். வட ,கிழக்கில் நம்மவர்கள் அமைச்சர்களாக மிகப் பாதுகாப்புடன் அரச அடிவருடிகளாக வலம் வருகின்றனர்.
ஆனால் நம் இளைஞர்கள் பாதுகாப்பின்றி அச்சுறுத்தலுடன் சிறையில் வாடுகின்றனர். மடிகின்றனர். இதுவே தமிழினத்தின் இன்றைய தலை விதியாகும். இயந்திரமா? ௭னவே ௭ம்மை நடுக்கடலில் தள்ளி விட்டு நிற்கும் அரசுக்கு இன்றும் வாக்களிக்கும் இயந்திரங்களாக தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இருக்க முடியுமா ௭ன்பதை சிந்தித்து கிழக்குத் தேர்தலில் நம்மக்கள் அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும் ௭னவும் தெரிவித்தார்.

Dear Selvarasa MP, Have you forgotten the massacre at Kattangudy Mosque, the tigers killed more than 100 innocent civilians who were praying there? You did not condemn it but now you are sheeding crocodile tears for Muslim. We know this is only for Politics.
ReplyDeleteஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்றது.
ReplyDelete