Header Ads



'Z' புள்ளி பிரச்சினையுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கொடுங்கள் - நாமல்

 
உயர்தரம் இசட் புள்ளி பிரச்சினையுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சர்ச்சையுடன் தொடர்புடைய தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்குஎதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப் போவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.