Header Ads



வடக்கு முஸ்லிம்களi இலக்குவைத்து இனரீதியான நகர்வுகள் - எச்சரிக்கிறார் ஹுனைஸ் எம்.பி.

இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார் சம்பவத்தை வைத்து ஜக்கிய தேசியக் கட்சி தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அம்மக்களுக்காக எதனையும் செய்ய வக்கில்லாமல் இருந்ததாகவும் சாடியுள்ளார்.

ஜக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து தமது கடும் விசனத்தை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டுக்கு எதிராக  சர்வதேசத்தில் சதி திட்டங்களை தீட்டும் அணியுடன் இணைந்து செயற்படும் போக்கினை கொண்டுள்ள ஜக்கிய தேசிய கட்சி போன்ற சில கட்சிகள் நடை பெறாத ஒன்றை நடந்ததாக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பிழையான செய்தியனை நிறுத்த வேண்டும்.

மன்னார் சம்பவத்தின் உண்மை நிலையினை அறிந்து கொள்ள முயற்சிக்காமல் அரசாங்கத்தினை குற்றம் சுமத்தும் பணியினையே தொடராக ஜக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள்  செய்வதை காணமுடிகின்றது.

நீதி மன்றம் தாக்கப்;பட்ட சம்பவத்தை ஒரு சட்டத்தரணி என்ற வகையில் நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.அதனது புனிதத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு கருத்துக்கள் பல தரப்பட்டவர்களால் கூறப்பட்டுவருகின்றது.

இவ்வாறான நிலையில் உண்மையினை மூடி மறைத்து வடக்கு முஸ்லிம்களை இலக்கு வைத்து நகர்த்தப்படும் இன ரீதியான செயற்பாடுகளுக்கு எம்மால் அனுமதியளிக்க முடியாது.இந்த சந்தரப்பத்தினை பயன்படுத்தி எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்தில் பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் ஜக்கிய தேசிய கட்சியின் பிரசாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம், ஒரு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டுமெனில் அதனது நிகழ்வுத்தன்மைக்கு அப்பால் சென்று நிருபிக்கப்படல் வேண்டும் என்பது தான் சட்டத்தின் அடிப்படை அம்சமாகும். ஆனால் அண்மைய மன்னார் சம்பவத்தின் முழுமையான விசாரணைகள் முடிவடையாத நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனை குற்றவாளியாக அடையாளப்படுத்துவது நீதியின் அடிப்படை தத்துவத்தை மீறும் செயலென சட்டத்தரணி என்ற வகையில் சுட்டிக்;காட்ட விரும்புகின்றேன் என்றும் பராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.


1 comment:

  1. ஐக்கியதேசியக் கட்சி அரசுதான், இந்திய படைகளை திருப்பி அனுப்பி, புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கி புத்துயிரளித்தது. ஐக்கியதேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில்தான் புலிகளால் பள்ளிவாசல் படுகொலைகள், முஸ்லிம் கிராமங்களில் படுகொலைகள், வட மாகாண முஸ்லிம்களின் இனச் சுத்தீகரிப்பு என்பவை மேற்கொள்ளப் பட்டன.

    இப்பொழுது மன்னார் விவகாரத்தில், ரிஷாத் பதியுதீனையும், மன்னார் முஸ்லிம்களையும் பாதிக்கும் வகையில் ஐக்கியதேசியக் கட்சியும், விஜயதாச ராஜபக்ஷவும் செயல்படுவது, தானாடாவிட்டாலும் சதையாடுதோ என்று கேட்கத் தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.