Header Ads



அன்று பள்ளிவாசல் - இன்று கோயில் முத்திரை வெளியீடு (படங்கள் இணைப்பு)

ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் தொழக்கூடிய ஜும்ஆ பள்ளிவாசலாக விளங்கிய இன்றைய நல்லூர் கோயில் குறித்து முத்திரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூரில் பரம்பரைபரம்பரையாக வாழந்துவந்த முஸ்லிம்களை அங்கிருத்து இனச்சுத்திகரிப்பு செய்து, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு படைகளின் உதவியுடன் அங்கிருந்த அல்லாஹ்வின் இல்லத்தை தகர்த்தமையும் வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடமாகும்.


இர்ஷாத்

நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தினை முன்னிட்டு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களின் ஏற்பாட்டில் இலங்கை அஞ்சல் திணைக்களம் நல்லூர் கந்தசுவாமி கோயில் ஞாபகார்த்த முத்திரையை வெளியிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய முன்றலில் விசேட முத்திரை வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது. வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் முதலாவது முத்திரையை பிரதி அஞ்சல் மா அதிபர் ஆர்.டி.பி.காமினியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நல்லூரானது நீண்ட பழைமையான வரலாற்றை கொண்டதுடன் யாழ்ப்பாண பிரதேசத்தின் சமூக, கலாச்சார, சமய மற்றும் வரலாற்று பெருமைமிக்க இதயப் பகுதியாக விளங்குகின்றது.

இக்கோயிலின் இவ்வாண்டுக்கான வருடாந்த மகோற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 17ம் திகதி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையவுள்ளது. வடமாகாண மக்களின் மிகப்பெரும் சமயப் பண்டிகையாக இம்மகோற்சவம் காணப்படுகின்றது.

கொடியேற்ற திருவிழாவான நேற்று ஐந்து ருபா பெறுமதியான மூன்று வகையான முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிபிடத்தக்கது.

வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என்.ரட்ணசிங்கம், வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், வடமாகாண உயர் அதிகாரிகள், அஞ்சல் திணைக்கள உயரதிகாரிகள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர். 







1 comment:

  1. 1744 இல் முஸ்லிம்கள் நல்லூரிலிருந்து வெளிஎற்றபட்டலும் கோவிலை முஸ்லிம்களின் பள்ளிவாசலின் மேல் அமைக்க அவர்கள் விடவில்லை. தொடர்ச்சியான ஆர்பாட்டங்கள் பழைய பூங்காவில் செய்யப்பட்டன. இந்நிலையில் ஒல்லாந்தரும் கோவில் கட்ட அனுமதிக்க வில்லை. 1902 ஆம் ஆண்டிலேயே இறுதியில் கோவில் கட்டப் பட்டது. 2012 இல் நூற்றி பத்தாவது வருட ஜாபகார்தம் கொண்டாடப் படுகிறது

    ReplyDelete

Powered by Blogger.