சிங்கள குழு என்னை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது - எரிக் சொல்கெய்ம்
AD - T
இலங்கை வந்திருந்த போது தன்னை குண்டுத்தாக்குதல் மூலம் கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாக இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். இவர் 2000ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்கவை சந்திப்பதற்காக இலங்கை வந்திருந்தார்.
இதன் போதே தன்னை கொலை செய்யவதற்கு சிங்கள குழு ஒன்று திட்டமிடப்பட்டிருந்ததாக எரிக் சொல்கெய்ம் 12 வருடங்களின் பின்னர் தெரிவித்துள்ளார். பத்திரிக்கை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போது இவ்விடயம் தொடர்பாக எரிக் சொல்கெய்ம் இன்று தெரிவித்துள்ளார்.
தன்னை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததை இலங்கை பொலிஸாரும் உறுதிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டு மோ மாதம் 21-24 காலப்பகுதியில் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மீது இனந்தெரியாத நபர்கள் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதல் நோர்வேக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கும் பொருட்டே நடாத்தப்பட்டதாக நம்பக் கூடியதாக அமைந்தது.
2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கையில் நோர்வேயின் பங்கு இருந்தது. இவர் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார்.

Post a Comment