முஸ்லிம்களின் விவசாய காணிகள் கபளீகரம் - வனவள அதிகாரிகளின் பாரபட்சம் (படங்கள்)
திருகோணமலையிலிருந்து அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்ட அனுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவௌ பகுதியில் பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப் பயிர்ச்செய்கை காணியும் விவசாயக்காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யுத்த காலத்தின் போது பல வருடங்களாக சேனைப் பயிர்ச்செய்கை செய்துவரப்பட்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் இன்றைய கால கட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
தனது பிள்ளைகளை மீன் பிடி தொழிலில் ஈடுபட்டும் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டும் வளர்த்த பிள்ளைகளுக்கு 18 வயதாகி விட்ட போதிலும் யுத்தமின்றி அனைத்து சமூகமும் ஒன்றிணைந்து வாழும் தருவாயில் பல வருட காலங்களாக விவசாயம் செய்து வரப்பட்ட முஸ்லிம்களுடைய காணிகளை அரச காணி எனக்கூறிக்கொண்டு வீட்டுக்கு பின்புறமாக உள்ள பரம்பரை பரம்பரையாக செய்யப்பட்ட காணிகளுக்கு பின்னால் வனவள அதிகாரிகள் கட்டைகளை போட்டு வருகின்றனர்.
முஸ்லிம் கிராமத்துக்கு அருகாமையிலுள்ள சிங்கள மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் வனவள அதிகாரிகளினால் கட்டை போடப்படவில்லை. இருந்தும் முஸ்லிம் கிராமமான ரொட்டவௌ கிராமத்தை சுற்றியே வனவள அதிகாரிகள் கட்டை போட்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் அயல் கிராமமான சுஹதகம பகுதியில் வீதியோரமாக காட்டை வெட்டாமல் காட்டுக்குள்ளேயே சிங்கள் சகோதரர்கள் வீடு கட்டியும் கடைகளை நடாத்தியும் வருகின்றனர். அப்பகுதிகளை பார்வையிடாத வனவள அதிகாரிகள் முஸ்லிம் கிராமங்களின் காணிகளையே முடக்குகின்றனர்.
தற்போது கீழே காட்டப்படுகின்ற படங்களை பார்வையிடுவதன் மூலம் முஸ்லிம்களுக்கு செய்யப்படும் அநியாயங்களை தெரிந்து கொள்ள முடியும். எனவே அரச உயரதிகாரிகள் மற்றும் சமூக நலனுள்ளவர்கள் காணி அபகரிப்பு விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.





Post a Comment