ஆகஸ்ட் 6 இல் திட்டமிட்டபடி A/L பரீட்சை ஆரம்பம் - பரீட்சை ஆணையாளர் அறிவிப்பு
2012 ஆம் ஆண்டிற்கான கா.பொ.த. உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கப்பட மாட்டாதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
கடந்தவருடம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இசெட் புள்ளி தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் இவ்வாண்டிற்கான பரீட்சைகள் பிற்போடப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே இவ் ஆண்டிற்கான கா.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Post a Comment