றிசாத் பதியுதீன் தப்பியோடவில்லை - ஈராக் தூதரக இப்தாரில் கலந்து கொண்டார்
அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டிலிருந்து வெளியேறியதாக சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவரின் கையடக்க தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தமையை அந்த ஊடகங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருந்தன.
இந்நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் பங்கேற்று இருந்தார். அந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களுடனும் சாதாரணமாக கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் அவர் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வுகளிலும் சாதாரணமாகவே கலந்து கொண்டுள்ளார்.

புலி சார்பு ஊடகங்களினதும், BBC தமிழோசையினதும் தொல்லை தாங்காது கைத்தொலைபேசியை அமைச்சர் நிறுத்தி வைத்திருக்கலாம்.
ReplyDelete