Header Ads



சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சார்த்திகளுக்கு கருத்தரங்கு

தகவல் உதவி - சர்மிளா செயீட்

இலங்கை சட்டக் கல்லூரிக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான அனுமதிப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம்; திகதி நடைபெறவுள்ளது.

இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள தமிழ் மொழி மூல மாணவர்களின் நலன்கருதி எதிர்வரும் ஆகஸ்ட் 4,5,6ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் முழுநாள் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காகவே இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கு பற்றிய மேலதிக தகவல்களைப் பெற விரும்புபவர்கள் 0773786376 அல்லது 0754000004 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.