இலங்கை வருகிறார் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
ஆகஸ்ட் 01-03 வரை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கார் இலங்கைக்கு வருகிறார். மூன்று நாள் சுற்றுப் பயணத்தின் போது, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர், மகிந்த ராஜபக்ச மற்றும் சில உயர் மட்டத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இரு தரப்புக்கிடையில் இடம்பெறும் பேச்சுக்களில், பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பாதுகாப்பு, கலாசாரம், சுற்றுலாத்துறை, ஊடகம், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் வியாபாரம் போன்ற துறைசார் உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும்.
பிராந்திய அமைதி மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்றவற்றை அதிகரிப்பது தொடர்பாகவும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவை மேலும் முன்னேற்றுவதையும் நோக்காகக் கொண்டே பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் Hina Rabbani Khar அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் பாகிஸ்தானிய அரசியலில் முக்கிய பங்கு வகித்துவருகிறார். இவர் மாநில பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சராக 2005-07 வரை சேவையாற்றியுள்ளார். அத்துடன் 2008-11 வரை நிதி மற்றும் பொருளாதார மாநில அமைச்சராகவும், பின்னர் யூலை 2011 தொடக்கம் வெளியுறவு அமைச்சின் இணைப்பாட்சி அமைச்சராகவும் கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Post a Comment