Header Ads



'வடக்கு முஸ்லிம்களே அச்சப்படாதீர்கள் - நான் உங்களோடு நிற்பேன்' - அமைச்சர் றிசாத்



வடக்கு முஸ்லிம்களை மீண்டும் இக்கட்டான நிலைக்கு தள்ளுவதற்கு சில சக்திகள் முயலுவதாகவும், வடக்கில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் இதனால் பெரும் துன்பத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்ததுடன், அவர்களின் நலனுக்காக இந்த புனித ரமளான் மாதத்தில் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ் முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலம் கருத்துரைத்த அவர் மேலும் கூறியதாவது,

வடக்கில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களின் நிலை பரிதாபத்திற்குரியது,  அவர்கள் பல்வேறு வகையான, பலரின் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். நெருக்கடிகளுக்கு அஞ்சி சிலர் மீண்டும் வெளியேறிவிடுவோமா என்று சிந்திக்குமளவு நிலைமை மோசமான கட்டத்தை அடைந்துள்ளது.

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேறுவதற்காக ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சு செயலாளரும், முப்படையினரும் மேற்கொண்ட தியாகங்கள் மிகப்பெரியது. இந்த தியாகங்கள் காரணமாகவே புலிகள் அழிக்கப்பட்டு, வடக்கு முஸ்லிம்களில் ஒருதொகுதியினர் மீண்டும் தமது தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேறியுள்ளனர்.

மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்திலிருந்து மீண்டும் வெளியேறக்கூடாது. அச்சுறுத்தலகளை கண்டு அவர்கள் பின்வாங்கக்கூடாது. இலங்கை முஸ்லிம்களுக்காயினும், வடக்கு முஸ்லிம்களுக்காயினும் அநீதி ஏற்படும் போது அங்கு எனது குரல் நிச்சயம் ஒலிக்கும். இதை எவரும் தடுக்கமுடியாது. பாதிக்கபட்ட வடக்கு முஸ்லிம்களின் நலனுக்காக தொடர்ந்து உழைப்பேன்.

தமிழ் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் அமைச்சர் என்ற வகையிலும் அவர்களின் குறைகளை போக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். எதீர்காலங்களிலும் அவர்களுக்கான எனது சேவைகளில் எத்தகைய குறையும் இருக்காது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்ததுடன், சில்லறை அச்சுறுத்தல்களை கண்டு மீளக்குடியேறிய முஸ்லிம்கள் மீண்டும் வெளியேற முயலக்கூடாது எனவும் அவர்களுக்கு ஆதரவாக எந்தவேளையிலும் தாம் தொடர்ந்து செயற்படுவேன் எனவும் உறுதியாக தெரிவித்தார்.

6 comments:

  1. அமைச்சரே, உணர்வுள்ள இலங்கை முஸ்லிம்கள் உங்களுடன் இருக்கின்றோம்.

    போராடாமல் வெற்றிகள் இல்லை. தியாகங்களும் போராட்டங்களும் நமக்குத் தேவை.சலசலப்புகளைக் கண்டு அஞ்சும் ஒருவராக நாங்கள் உங்களைக் காணவில்லை. ஒரு தைரிய சாலியாக, வீரனாகவே உங்களைக் காண்கின்றோம்.

    எங்கள் துஆக்களில் நீங்களும் இருக்கின்றீர்கள்.

    ReplyDelete
  2. கெளரவ ரிஷாத் பதியுதீன் அமைச்சர் அவர்களே!
    பேசா மடந்தைகளாக இருக்கும் ஏனைய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விட உங்களிடம் உயர்ந்த பட்ச சமூக அக்கறையைக் காண்கிறோம். இது உங்கள் பகுதிப் பிரச்சினை என்பதற்காக சமூகம் பற்றிச் சிந்திக்காது இவர்கள் மெளனம் காப்பது கவலையளிக்கிறது. இவர்கள் பிரதேசங்களின் பிரதிநிதிகளா? சமூகப் பிரதிநிதிகளா? என்பதில் சந்தேகமாகவுள்ளது.

    ReplyDelete
  3. Asalamu alaikum ungaludan allah itlrukkiran ungalukkaha ueiraum kudukka naangal irukkirom sila amacharkal ungalai arasiyal vaathiyahavea paarkirarkal naangal ungalai muslim aaha paarkirom.

    ReplyDelete
  4. அமைச்சர் சார்!!!
    இப்படியான சந்தர்பத்தில் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவி கட்டாயம் கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்!!!
    சட்டத்துறை சார்ந்த எமது
    சமூக அரசியல் தலைவர்களை உதாசீனப்படுத்தி
    நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்காதீர்கள்.நீங்கள்
    மேலும் மேலும் வடக்கு முஸ்லிம் சமூகத்துக்கு உழைக்க
    வேண்டும்.

    ReplyDelete
  5. Payangaravaathi aayarukkum avarin adivarudi annethipathikkum ithai vaithu arasiyal nadathum vanguroththukalukkum ancha thevai illai. kourava risad avargale, neengal engal thalaivan. thanathu makkalukku pirachinai enral oru makkal pirathinithi eppadi nadakka vendum enpathitku neengal utharana purushan. Kudumbame illatha aayarukku aal irunthal Neengal engal thalaivan engal nanban engal sagotharan ungalukkaga naangal irukkirom... karuppu angikkum vellai angikkum thuvesam thalaikku adiththu vittathu ithanal alivi avargalukkuthan

    ReplyDelete
  6. உங்கள் சேவைகள் அளப்பரியது...
    நிச்சயம் எங்கள் துஆக்களில் நீங்களும் இருப்பீர்கள்..
    அல்லா உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக..

    ReplyDelete

Powered by Blogger.