சட்டத்தரணிகளிடையே குழப்பம் - முஸ்லிம் சட்டத்தரணிகள் எதிர்ப்பு
மன்னார் விவகாரத்தில் சட்டத்தரணிகள் சங்கமானது பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமை தொடர்பில் கவலைகள் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் சட்டத்தரணிகள் பலர் தமது விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சட்டத்தரணிகள், விஜயதாச ராஜபக்ஸ தலைமையில் செயற்படும் சட்டத்தரணிகள் சங்கமானது தம்முடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லையென அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மன்னார் சம்பவத்தில் அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாக காணப்படுகிற போதிலும்கூட ஒரு தனிப்பட்ட சமூகம் சார்ந்துநிற்கும் சட்டத்தரணிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் செயற்படமுடியாதெனவும் முஸ்லிம் சட்டத்தரணிகள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மன்னார் - உப்புக்குள முஸ்லிம் மீனவர்களின் குரல்களுக்கு செவிமடுக்காது கொழும்பிலிருந்து செயற்படும் சில சிங்கள சட்டத்தரணிகளின் செயற்பாடு அமைந்துள்ளமையானது வெட்கப்படகூடியது எனவும் சுட்டிக்காட்டியுள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வமிருந்தால் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று உண்மை கண்டறியப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

மாஷா அல்லாஹ்.
ReplyDeleteஉண்மை வெளிப்படுத்தப் பட வேண்டும்.
உண்மையில் பாதிக்கப் பட்டது யார் என்பதனை அனைத்து நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
விஜயதாச ராஜபக்ஷ, அரசாங்கத்தின் மீது தனக்கிருக்கும் வெறுப்புக்குப் பழிவாங்க, ரிஷாத் பதியுதீனை ஒரு துரும்புச் சீட்டாக கருதி, 23 வருடங்களாக துயரனுபவித்த அப்பாவி மன்னார் முஸ்லிம்களின்
வாழ்வை நாசமாக்கப் பார்க்கின்றார். இதனை தொடர்ந்தும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
La Viox unkalukku paraattukkal! Unmai Uraiththeerkal. Enathu Karuththum ithuvey!
ReplyDeleteMasha Allah thanks
ReplyDelete