'முஸ்லிம்களின் உற்ற தோழன் மஹிந்த' எனவே அவருக்கு ஆதரவளிப்போம் என்கிறார் காதர்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் சகல முஸ்லிம்களும் கட்சி பேதங்களை மறந்து ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு நல்க வேண்டும் என்று சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு முஸ்லிம்களதும், பலஸ்தீன் உள்ளிட்ட முஸ்லிம் உலகினதும் மிக நெருங்கிய தோழனான எமது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அவர்களின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது முஸ்லிம்களின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, எமது ஜனாதிபதி அவர்கள் இந்நாட்டில் வாழுகின்ற எல்லா இன, மத, மக்களையும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போன்றே பார்க்கின்றார். அந்தடிப்ப டையிலேயே சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றார். இந்நாட்டில் வாழுகின்ற எல்லா இன, மத, மக்களுடனும் மிகவும் நெருங்கிப் பழகக் கூடிய ஒரே தேசியத் தலைவராக அவர் விளங்குகின்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தைப் போன்று வேறு எந்தவொரு ஆட்சியிலும் முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கு சேவைகள் கிடைக்கப் பெறவில்லை.
இதனை எல்லா முஸ்லிம்களுமே அறிவர். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் கட்சி அரசியல் பேதங்களை மறந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும. முன்னணியின் அமோக வெற்றியில் நாமும் பங்காளர்களாக வேண்டும். ஒரு சிலரின் அற்ப லாபங்களுக்கு முஸ்லிம்கள் ஒரு போதும் துணை போகக் கூடாது. பொறுப்புணர்வோடு செயற்படுவது அவசியம் என்றார் tn

யாரு அவர் உங்க தோழனா?
ReplyDeleteநீங்களே முஸ்லிம்களின் தோழனாக இல்லாமல் இருக்க நீங்கள் சொல்லும் அவர் எப்படி.