சட்டவிரோதமாக ஆட்களை கடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் சிக்கினார்
சட்ட விரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனச்சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடல் வழியாக அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேற்படி மூவரில் ஒருவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவராக இருந்து அந்தப் பதவியை இராஜினாமாச் செய்து தற்போது கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகவுள்ள வெள்ளதம்பி சுரேஷ் குமார் (வயது 38) என்பவராவார்.
வெள்ளத்தம்பி சுதாகரன் (வயது 39) தண்டாயுதபாணி கரிகாலன் (வயது 39) உட்பட மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபரான சுரேஷ் குமார் மக்களை ஏமாற்றி அரசியல்வாதியாகவிருந்து சுமார் 2 1/2 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளார். புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு இவர் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கடந்த காலங்களில் இவ்வாறான ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. 2012-01-01 ஆம் திகதி முதல் இன்றைய நாள்வரை சட்ட விரோதமாக செல்ல முயன்ற 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் ஆட்கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்களாவர்.
Post a Comment