அமைச்சரவை பதவிகள் - இஹ்வான்களுடன் மோதும் சலபிகள்
அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அலக்சான்ட்ரியா நிர்வாக அதிகாரி மெதாத் அல் ஹதாத், அல் அஹ்ரம் நாளிதழுக்கு இந்த தகவலை அளித்துள்ளார்.
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி, அந்நாட்டின் புதிய பிரதமராக பெரிதும் அறிமுகமில்லாத ஹிஷாம் கன்திலை நியமித்துள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இதில் எகிப்தின் புதிய அமைச்சரவையில் அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுக்கு 12 அமைச்சு பதவிகள் வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மேலும் 12 அமைச்சர்கள் துறைசார் நிபுணர்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் மெதாத் அல் ஹதாத் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக எண்ணெய், வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், விநியோகம் மற்றும் உள்நாட்டு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களில் சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி கவனம் செலுத்தி வருவதாக கூறிய ஹதாத், ஆளும் இராணுவ கவுன்ஸில் சார்பாக செயற்படும் ஊடகத்துறையில் மாற்றத்தை கொண்டு வரவும் வலியுறுத்துவதாக கூறினார். ஆனால் கல்வி, கலாசாரம் மற்றும் ஊடகம் ஆகியவற்றில் இஸ்லாமியவாதிகள் அங்கம்வகிக்கமாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் உறுப்பினர் சய்யித் எமரா கூறும்போது, இராணுவ கவுன்ஸிலுக்கு அமைச்சரவையை தேர்வு செய்வதில் தலையிட அனுமதிக்க முடியாது என்றார். முக்கிய அமைச்சுக்களான உள்துறை, வெளியுறவு, நீதி மற்றும் ஊடக அமைச்சுகளை தேர்வு செய்வதில் இராணுவ கவுன்ஸிலை அனுமதிக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சை தேர்வு செய்ய மாத்திரமே இராணுவ கவுன்ஸிலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எனினும் எகிப்தின் புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் அதிகம் இடம்பிடிப்பதற்கு சலபிக்களின் அந்நூர் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. “இது ஒன்றும் சேக் அல் பகிர்ந்த ளிப்பதற்கு. தகுதியானவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்று அந்நூர் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் எகிப்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ஹிஷாம் கன்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மொஹமட் முர்சியை சந்தித்தார். அதன் போது புதிய அமைச்சரவையில் இடம் பிடிப்போர் தொடர்பான பெயர்கள் கொண்ட ஆவணம் பகிரப்பட்டதாக நம்பப்படுகிறது.
புதிய பிரதமரின் திடீர் நியமனம்
இதேவேளை எகிப்தின் புதிய பிரதமராக பெரிதும் எதிர்பார்க்கப்படாத தற்போதைய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஹிஷாம் கன்தில் நியமிக்கப்பட்டது குறித்து பல தரப்புகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. அத்துடன் அவரது அரசியல் பின்னணி மற்றும் தொடர்புகள் பற்றி சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
எகிப்தின் பிரபல நபர்களான செயற்பாட்டாளர் மொஹமட் அல் பரதி, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் பரூக் அல் ஒக்தா மற்றும் துணைப் பிரதமர் ஹஸம் அல் பப்லாவி ஆகியோரில் ஒருவரே புதிய பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுவந்த நிலையிலேயே கன்திலுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. கன்தில், எந்த கட்சியும் சாராத சுயாதீனமானவர் என்று ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் கன்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர் என இடதுசாரி கட்சியான தகம்முவின் சிரேஷ்ட உறுப்பினர் ஹுஸைன் அப்துல் ரஸாக் குறிப்பிட்டுள்ளார். கன்தில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னர் அவர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பில் இருந்ததாக ரஸாக் கூறியுள்ளார்.
அத்துடன் கன்தில்லை இடைக்கால அரசின் அமைச்சரவைக்கு பரிந்துரை செய்தவர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவான மதத் தலைவர் சப்வாத் ஹகா என்பவராகும்.
இந்த பரிந்துரைக்கமையவே முன்னாள் பிரதமர் ஷராப், அவருக்கு நீர்ப்பாசனத் துறை அமைச்சு பதவியை வழங்கினார் என்று மாற்றத்திற்கான தேசிய முற்போக்கு அமைப்பின் பேச்சாளர் அஹ்மட் தாஹா குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று 50 வயதான ஹிஷாம் கன்திலின் அரசியல் அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நீர்ப்பாசன மற்றும் வடிகாலமைப்பு பொறியியலாளரான கன்தில் அமெரிக்காவில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
அவர் எகிப்து உள்நாட்டு விவகாரங்களில் தொடர்புபட்டவர் அல்ல. கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சிக்கு முன்னரோ பின்னரோ சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர் அல்ல என்று கூறப்படு கிறது.
கன்திலின் நியமனம் குறித்து அந்நூர் கட்சி பேச்சாளர் நாதா பகர் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “முர்சியின் முடிவு ஒரே ஒரு விடயத்தில் மாத்திரம் நல்லதாகும். அது அவரது வயது மாத்திரமே” என கூறப்பட்டுள்ளது.

Post a Comment