கிழக்கு தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கு தேர்தல் அறிவுறுத்தல் கூட்டம்
பாஸி பஹ்ஜான்
கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு வேட்பாளர்களுக்கு தேர்தல் செயலகத்தின் விஷேட அறிவுறுத்தல் கூட்டம் எதிர்வரும் 2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயெட்ச்சைக்குழு வேட்பாளர்களுக்கு தேர்தல் விதி முறைகளை தெளிவுபடுத்தும் விஷேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 26-07-2012 நடைபெற்றது.
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் 'மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விஷேட கூட்டத்தில் தேர்தல் செயலகத்தின் பிரதி தேர்தல் ஆணையாளர்.எம்.எம்.மொஹம்மட்'மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அஸங்க ரத்நாயக்க'மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவீந்திரவைத்தியலங்கார 'மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.ஏ.சமரகோன்'மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 'பொலிஸ் அதிகாரிகள் 'ஊடகவிலாளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இக் கூட்டத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகள்'தேர்தல் சட்டங்களை மீறுவோர்ககெதிரான நடவடிக்ககைகள்'பற்றி பிரதி தேர்தல் ஆணையாளர்.எம்.எம்.மொஹம்மட் தெளிவாக எடுத்துக் கூறினார்.
இது தவிர மாவட்டத்தில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடாத்த மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் 'மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலதிக விபரங்களை இந்த விஷேட கூட்டத்தில் தெளிபடுத்தினார்.


Post a Comment