பொத்துவில் முஸ்லிம்களின் முன்மாதிரி - மியன்மார் முஸ்லிம்களுக்காக துஆ பிரார்த்தனை
மியன்மாரில் முஸ்லிம்கள் வகை தொகையின்றி படுகொலை செய்யப்படும் அவலம் தொடரும் நிலையில், அந்நாட்டு முஸ்லிம்களுக்காக தொழுகையுடன் கூடிய துஆ பிரார்த்தனை இன்று 27-07-2012 வெள்ளிக்கிழமை பொத்துவில் ஜும்ஆ பள்ளிவாசல்களில் நடைபெறவுள்ளது.
அஸ்ரோ என்றழைக்கப்படும் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் நிறுவனர் மொஹமட் பரீஸ் இதுகுறித்து தகவல் தருகையில்,
மியன்மார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து யாழ் முஸ்லிம் இணையம் வெளியிட்ட செய்திகள் எமது கவனத்தை ஈர்த்தன. இதுகுறித்து பொத்துவில் உலமா சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவர்கள் நம்பவில்லை. உடனே லெப்டொப் கொம்பியூட்டர் கொண்டு சென்று யாழ் முஸ்லிம் இணையத்தில் வெளியாகியிருந்த மியன்மார் முஸ்லிம்களின் அவலங்கள் மற்றும் புகைப்படங்களை உலமா சபையினரின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்.
உலமாக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் இதற்கு முன் இவ்வாறான விடயங்களை கேள்விப்பட்வில்லை என்றனர். மியன்மார் முஸ்லிம்களுக்காக துஆஉடன் கூடிய தொழுகை நடாத்தப்பட வேண்டுமென்ற எமது கோரிக்கையை அவர்களும் ஏற்றுக்கொண்டனர்.
பொத்துவிலில் அமைந்துள்ள 5 ஜும்ஆ பள்ளிவாயல்களில் மியன்மார் முஸ்லிம்களுக்காக துஆ பிரார்த்தனையும், சிறப்புத் தொழுகையும் நடாத்துவதற்கான எழுத்துமூல ஒப்புதலை பொத்துவில் உலமா சபை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் இன்ஷா அல்லாஹ் 27-07-2012 வெள்ளிக்கிழமை அன்று பொத்துவிலில் ஜும்ஆ பள்ளிவாயல்களில் சிறப்புத் தொழுகை நடைபெறும்.
மியன்மார் முஸ்லிம்களின் அவலங்கள் குறித்து இலங்கை முஸ்லிம்களிடம் போதிய வழிப்புணர்வு ஏற்படவில்லையெனவும் சுட்டிக்காட்டிய அவர், மியன்மார் பௌத்த நாடு என்றபடியால், இலங்கையில் அதற்கெதிராக போராட்டம் நடாத்த சிலர் அச்சப்படுவது நியாயமென்ற போதிலும், துஆ மற்றும் சிறப்புத் தொழுகை மூலம் மியன்மார் முஸ்லிம்களுக்காக இலங்கை முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.

insha allah parpam
ReplyDeleteஅல்லாஹூத்தாலா மியன்மார் மக்களுக்கு பொறுமையைக் கொடுப்பானாக......
ReplyDeleteஅஸ்ரோ அமைப்பின் செயற்பாடு குறித்து சந்தோசப்படுகிறேன் இப்படியான இளைஞர் குழுக்களின் செயற்பாடு எம் மண்ணுக்கு மேலும் மேலும் அவசியப்படுகிறது
tnx u so much
Deleteமாஷா அல்லாஹ் அவர்களை போன்று ஏனைய ஊர்களிலும் ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
ReplyDelete