ஜெயலலிதா துரோகம் செய்துவிட்டாராம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் போராட்டம் (படம்)
தகவல் உதவி - ரஸ்மின்
சென்னையில் ஆயிரம் விளக்கு மசுதி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு கோஷங்களை முழங்கி தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை. மேலும் 34 ஆசிரியர்களில் ஒருவர் கூட முஸ்லீம் இல்லை.
இதை கண்டித்து (வியாழக்கிழமை 14-6-2012) சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனது குறிப்பிதக்கது.



good political work welcome tntj
ReplyDeleteNot Political work.... it s a great social work...........
ReplyDeleteKhurshid Mansoori
we will become a politic party insha all
ReplyDeleteella iyakkangalum ippadittan irikka wenum
ReplyDelete