Header Ads



''ஒருவனின் நடத்தையில் குறை ஏற்பட்டால் அவனது வாழ்நாள் வீணாகிவிடும்''

கண்டியிலிருந்து மொஹமட் ஹபீஸ்

ஒருவனின் நடத்தையில் குறை ஏற்பட்டால் அவனது முழுவாழ் நாளும் வீணாகிப் போனதற்கு ஒப்பாகும் என்று ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் முத்து சம்பந்தர் தெரிவித்தார்.

(14.6.2012 - வியாழக்கிழமை) கண்டி சித்தி லெவ்வை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற மாணவ தலைவர்களுக்கு பதக்கம் சூட்டும் வைபவத்தில் அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

'வாழ்வில் பணம் ஈட்டுவதில் குறை ஏற்பட்டு விட்டதா? கவலைப்படாதே அதை என்றோ ஒருநாள் மீட்டிக் கொள்ளலாம்.உனது உடல் நலத்தில் ஏதும் குறை ஏற்பட்டு விட்டதா? உடனே வைத்திய உதவியை நாடு. அது சரியாகி விடும். நடத்தையில் தவறு ஏற்பட்டு விட்டதா? நீ என்ன செய்தும் பயனில்லை. உனது வாழ்நாளே வீணாகி விட்டது' என்பது ஒரு பெரியாரின் கருத்ததாகும். எனவே ஒவ்வொருவரும் நமது நடத்தையில் மிகக் கவனமெடுத்தல் வேண்டும்.

உலகில் இருவகைத் தலைவர்களை நாம் காண்கிறோம். அதில் ஒருவகையினர் மற்றவர்களுக்கு மதிப்பளித்து நல்லதைச் செய்து தலைவராக அச்சமூகத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள். இதற்கு உதாரணமாக தீர்க்கதரிசிகளையும் மேதைகளையும் உத்தமர்களையும் குறிப்பிடலாம் பலநூற்றாண்டுகள் கடந்தாலும் இன்று அவர்கள் நினைவு கூறப் படுகின்றனர். அவர்களது கருத்திற்கு மதிப்புண்டு.

மற்றவர் தன்னைத் தானே தலைவராகப் பிரகடணப்படுதிக் கொண்டு அடாவடித்தனம் மூலம் தனது தலைமைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். இப்படியானவர்கள் பலவீனப் படும் போது விரட்டி அடிக்கப்பட்டு அவர்களது கருத்துக்களும் கொலை செய்யப்படுகிறது. யாரும் அவாகருத்துக்களை மதிப்பதில்லை. அவை அவர்களுடனே மண்ணுடன் மண்ணாகச் சங்கமமாகி விடும்.

எனவே நாம் நல்லதைச் செய்து நல்லதலைவர்களாக முற்பட வேண்டும். மாணவ தலைவர்களுக்கும் இது பொருந்தும் என்றார்.














No comments

Powered by Blogger.