ஜமாத்தே இஸ்லாமியின் ஆதரவில் மன்னார் முஸ்லிம்களுக்கு வீடுகள் கையளிப்பு (படங்கள்)
மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நொச்சிக்குளம் கிராமத்தில் குவைத் நிவாரண அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில்,நிர்மாணிக்கப்பட்ட 42 வீடுகள் இன்று அம்மக்களிடம் கையளிக்கப்பட்டன.
கைத்தொழில்,வணிகத துறை அமைச்சர் றிசாத் பதயுதீனின் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான குவைத் நாட்டின் துதுவர் யாகூப் யூசுப்-அல்-அதிக்கீ அதனை இன்று சனிக்கிழமை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
ஜமாத்தே இஸ்லாமியின் சமூக சேவை பிரிவு இந்த நிர்மாணப்பணிகளுக்கான திட்டத்தை நடை முறைப்படுத்தியது.இந்த திறப்பு விழாவில் குவைத் நாட்டின் பிரபல சமூக சேவை சேவை மற்றும் நிவாரண அமைப்பின் தகுதியுடைய அதிகாரி பத்ர் அல்-சம்ரூக், ஜமாதே இஸ்லாமின் சமூக சேவை பிரிவின் பொறுப்பாளர் மௌலவி அப்துர் ரஹ்மான், நானாட்டான் பிரதேச சபை தலைவர்அன்புராஜ், பிரதேச சபை உறுப்பினர்களான சூசை மற்றும் சஹாப்த்தீன்,ஒ.எச்.ஆர்.டீ.நிறுவன செயலாளர் எஸ்.எப்.எம்.றமீஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தற்போது இக்கிராமத்தில் மீள்குடியேறியுள்ள 108 குடும்பங்களில் முதல் கட்டமாக 42 குடும்பங்களுக்கு இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டதுடன்,அவர்களுக்கான உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன. இலங்கைகாக குவைத் துதுவர் யாகூப் யூசுப் அல்-அதீக்கி,தமது விஜயத்தை நனைவு கூறும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தமது நாட்டின் தேசிய சின்னமொன்றையும் அன்பளிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.
Ellaam sari. ennaththukku intha polladi masiradi ellaam penkal menmayaaka pakkuwamaaka amarnthu iruppathu thaan siranthathu
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்,நல்ல விடயம்.சிலம்படிப்பதும்,கும்மியடிப்பதும் ஜமாஅதே இஸ்லாமியின் மார்க்க வழிமுறைகளில் ஒன்றோ.
ReplyDeleteசிலம்படிப்பது புனிதமான வேலை போலும் ஏனெனில் சிலம்படிக்கும் பெண்கள் காலில் செருப்புகள் கூட இல்லாமல் இருக்கிறார்களே.
ஜுப்பா போடுகிறவனல்லாம் மார்க்கம் தெரிந்தவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு நல்ல ஓர் உதாரணம்.இது அவர்களின் தேசிய உடை என்பதை மார்க்கத்தின் பெயரால் ஜுப்பா போடுகிறவர்கள் புரிந்து கொண்டால் சரிதான்.
Meraan