Header Ads



அவுஸ்திரேலியாவிலும் தோல்வியை தழுவியுள்ள இஹ்வானுல் முஸ்லிம்கள்


எகிப்திலிருந்து ஹபிபுல்லா பைஸ்

அவுஸ்திரேலியாவில் நடை பெற்ற எகிப்திற்காண மீள் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள். அவுஸ்திரேலியாவில் நடை பெற்ற எகிப்திற்காண மீள் ஜனாதிபதி தேர்தலில் பதவி கவிழ்க்கப்பட்ட முபாரக்கின் எச்சமான “அஹ்மத் சபீக்” மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மேல்போனில் நடைபெற்ற “மீள் ஜனாதிபதி” தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையகம் இன்று வெளியிட்டுள்ளது .அந்த அடிப்படையில் “அஹ்மத் சபீக் 855 வாக்குகளையும் ,இஹ்வானிய வேட்பாளரான முஹம்மத் முர்சி 128 வாக்குகளையும் பெற்றுள்ளனர் .

மேல்போனில் எகிப்தியர்களின் மொத்த வாக்குகள் 1870 இதில் அளிக்கப்பட்ட வாக்குகள் 1106 ஆகும் . இதில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 123 ஆகும் .

இந்த நிலையை பார்க்கும் பொது மீண்டும் முபாரக்கின் ஆட்சியே நிலை நாட்டப்படலாம் ஏன எதிர்பாக்கப்படுகிறது . இந்த நிலை ஏனைய “மீள் ஜனாதிபதி” தேர்தல் நடக்கும் இடங்களில் எத்தகைய தாக்கம் செலுத்துமென பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

எனன்றல் இந்த இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிக கூடியதாக உள்ளது . இன்னொரு கோணத்தில் நோக்கினால் இந்த தெரிவு மக்கள் தெரிவு செய்தது தானா ? அல்லது ஏதாவது உள் விளையாட்டு நடக்கின்றதா ? ஏன என்ன தோன்றுகிறது .நாமும் பொறுத்திருந்து பார்ப்போம் எகிப்து மக்களுக்கு எப்படியான ஆட்சி மீண்டும் கிடைக்கப்போகிறது என்று..?
 (http://www.almasryalyoum.com/node/905726)
 .

No comments

Powered by Blogger.