இலங்கையில் யாழ்ப்பாணத்திலேயே புற்றுநோயளர்கள் அதிகம் - டாக்டர் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு புற்று நோயாளிகள் இருப்பதாக யாழ்ப்பாண சுகாதார சேவை பிராந்தியப் பணிப்பாளர் டொக்டர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்து மதகுருமாரும், மரக்கறி வகைகளை அதிகம் உட்கொள்வோருமே அதிகளவு புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மரக்கறி வகைகளை பயிர்ச் செய்யும் போது அதிகளவு இரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கிருமி நாசினிகள் மற்றும் சில வகை இரசாயன உரங்களினால் இவ்வாறு மரக்கறி வகைகள் உடலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சேதன பசளைகளைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் விவசாயம் செய்வதன் மூலம் பாரிய ஆபத்துக்களை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். gtn
Post a Comment