Header Ads



கிறிஸ்தவ தேவாலயத்தில் அல்குர்ஆன் ஓதி, விளக்கவுரை நிகழ்த்திய பாதிரியார்

அமெரிக்காவில் வர்ஜீனியா மாநிலத்தில் ஒரு கிறித்தவ ஆலயத்திற்குள் ஸ்கோட் மார்ஜன் என்ற பேராயர் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி விளக்கமும் அளித்தார் என்று சொன்னார் நம்புவீர்களா? உண்மை அதுதான். குர்ஆன் முஸ்லிமல்லாதோர்மீத வன்முறையை கட்டவிழ்த்துவிட தடை விதிக்கிறது என்றும் பெண்களை மதித்து சமூகக் கட்டமைப்பில் பெண்களுக்கான பங்கை எடுத்துரைக்கிறது என்றும் பேராயர் விவரித்தார்.

பேராயர் மார்ஜன் சிறு வயதில் தம் தந்தையுடன் ஆப்கானிஸ்தானில் வளர்ந்தவர். முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழ்ந்தபோது இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டவர். இது, பெரியவரானபின் அவரது மனத்தை நன்கு ஆக்கிரமித்துக்கொண்டது. நான் கற்றுக்கொண்ட உண்மையை என் சமூகத்திற்குச் சொல்வதுதான் என் கடமை என்றார் மார்ஜன்.

No comments

Powered by Blogger.