Header Ads



யாழ்ப்பாண கலாசார சீரழிவுக்கு வெளியாரே காரணம் - வைத்திய அதிகாரி

AD

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சிசுக்கொலைகள் மற்றும் கருக்கலைப்பு போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணத்தை விட வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாலேயே மேற்கொள்ளப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிலைய வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் சட்டத்தற்கு முரணான அல்லது தவறான பாலியல் தொடர்புகளே எனவும் அவர் குறிப்பிட்டார். அது தவிர சிறுவயது கர்ப்பம் அடைதல் போன்ற சம்பவங்களினால் கருக்கலைப்பு அதிகமாக நடைபெறுகின்றன.

வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டத்திற்கு வருகின்ற இவ்வாறானவர்கள் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிராபத்தையும் எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் கலாச்சார பிறழ்வு நிலைக்கு வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் செயற்பாடுகள் முக்கியம் பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.