Header Ads



லிபியாவில் அரச படையினருடன் பழங்குடியினர் மோதல் - தேர்தலும் ஒத்திவைப்பு



லிபியாவின் தென்பிராந்தியத்தில் அரச படையினருக்கும், பழங்குடியினபேராட்டகாரர்களுக்கும் இடையிலான மோதலில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இடம்பெறும் இந்த மோதல்களில் கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்கியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

முஹம்மர் கடாபி பதவி கவிழ்கப்பட்ட பின்னர் நாட்டின் பாதுகாப்பினை பேணுவதில் லிபிய அரசாங்கம் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றது.

லிபியாவில் ஜூன் 19ல் ‌நடக்கவிருந்த ‌பொதுதேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷன் உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தேர்தல் அமைப்பு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. தேர்தல் தேதி ஜூலை 10ல் தேர்தல் நடத்தலாம் என ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.லிபியாவில் 2.7 மில்லியனுக்க மேல் மக்கள் தொகை‌ கொண்டது லிபியா அரசு.80 சதவீதம் பேர் ஓட்டளிக்க தகுதியுடைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments

Powered by Blogger.