Header Ads



இலங்கையர் மூவர் இஸ்ரேலில் கைது

இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் கைதுசெய்யபட்டுள்ளனர். எனினும், அவர்கள் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இஸ்ரேலிய காவல்துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் மேலும் தென் சூடான், நைஜீரியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 150 அகதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேலின் உள்துறை அமைச்சில் தம்மை பதிவு செய்துக்கொள்ளாமை காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக, அமைச்சர் எல்லி இசாய் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் தாமாகவே இஸ்ரேலை விட்டு வெளியேறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.