Header Ads



ஹொஸ்னி முபாரக் உடல்நிலை மோசமானது - கோமா நிலையில் சிகிச்சை



பொதுமக்களின் போராட்டம் காரணமாக எகிப்தில் 30 ஆண்டுகள் ஆட்சி நடத்திய முன்னாள் அதிபர் முபாரக் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து பதவி விலகிய அவர் ராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார். இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

போராட்டத்தின்போது 800-க்கும் மேற்பட்ட பொதுமக்களை ராணுவம் மூலம் கொன்று குவித்ததால் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2-ந்தேதி கெய்ரோவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் மனம் நொந்த அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை அவர் சரிவர சாப்பிடவில்லை. இதனால் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து சிறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் கோமா நிலையை அடைந்தார். அவரது இதயம் சீராக வேலை செய்யவில்லை. எனவே, அவரை பார்க்க மனைவி சுஷானா முபாரக் மற்றும் 2 மருமகள்களுக்கு சிறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர். ஆகவே, அவர்கள் வந்து பார்த்தனர். இதையடுத்து, முபாரக்கு சிறைக்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க அவரது மனைவி சுஷானா அனுமதி கோரினார். அதை சிறை நிர்வாகம் ஏற்கவில்லை.

No comments

Powered by Blogger.