துருக்கியில் 6 ரிக்டர் அளவு பூகம்பம்
துருக்கியில் நேற்று தென் மேற்கு கடற்கரை பகுதியில் கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெதியி நகரம் அருகே வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதன் அருகே ஏஜியான் கடற்கரை சுற்றுலா விடுதி உள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து பீதி அடைந்த பயணிகள் அங்கிருந்து வெளியேறி வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.
அதே போன்று அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளிகளும் தப்பி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே அங்கு 6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. கட்டிடத்தில் இருந்து குதித்த ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 பேர் மாரடைப்பால் அவதிப்பட்டனர். வேறு விவரங்கள் வெளியாகவில்லை.

Post a Comment