வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் இரத்தத்தால் எழுதப்பட்ட கறை - மாவை எம்.பி.
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது இரத்தத்தால் எழுதப்பட்ட கறையாகும். அவற்றை அகற்றி எமது உறவை புதுமைப்படுத்த தற்போது நல்லதொரு சந்தரப்பம் ஏறபட்டுள்ளதாக தழிரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று சனிக்கிழமை, 2 ஆம் திகதி, யாழ் முஸ்லிம் இணையம் ஏற்பாடு செய்திருந்த வேர் அறுதலின் வலி கவிதை தொகுப்பு வெளியீட்ட விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மாவை சேனாதிராஜா எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதீயுதீன் கலந்து கொண்டுள்ளது மகிழ்ச்சியான விடயம். ஏனெனில் அவரும் தமது மண்ணிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டு அரசிலுக்குள் வந்து இன்று ஒரு அமைச்சராக இருக்கின்றார். அதே போன்று நானும் எனது யாழ் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் கழிந்துள்ளதை கூறவிரும்புகின்றேன். இன்று எனது பிரதேசம் விடுவிக்கப்ப்ட்டது குறித்து பேசினாலும்,எமது தமிழ்,முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் முற்றாக இடம் பெறாத நிலையில் அங்கு எனது மீள்குடியேற்றம் இடம் பெறாது.
தமிழரசுக்கட்சியின் கொள்கையிலும் நாங்கள் கலந்து கூட்டங்களிலும் எடுக்கின்ற தீர்மானங்கள் தமிழர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல அது எமது முஸ்லிம்களுக்கும் பொருத்தப்பாடு உடையனவாகவே இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
நான் பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.மட்டக்களப்பில் இருந்த போது என்னை வந்து பார்த்து எனக்கு உணவு கொடுத்தவர்களில் முஸ்லிம்கள் அதிகமானவர்கள். அவர்களது உணவின் இரத்தம் இன்றும் எனக்கு ஞாபகமிருக்கின்றது.
இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் தனியான ஒரு அலகை பெற வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர் மனிதர் அஷ்ரப் அவர்கள். ஆனால் அன்றைய காலம் அதற்கு இடமளிக்காமல் போனதுடன்,வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு இன்று அது வேறாக இருக்கின்றது.
வடகிழக்கு என்பது தமிழர்களதும்,முஸ்லிம்களதும் தாயகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்பட முடியாது. அவர்கள் வாழ,வேண்டும்,தம்மைத் தாமே ஆள வேணடும் என்பது தான் தமிழரசுக்கட்சியின் கொள்கையாகும். அதை அன்று தந்தை செல்வா சொன்னார். இன்றும் அதை நாம் பகிரங்கமாக செல்வோம்.
வடக்கில் தற்போது தமிழ்,முஸ்லிம் பூமிகளில் பெரும்பான்மை சமூக குடியேற்றங்கள் இடம் பெறுகின்றன. மீண்டும் இராணுவ மயமாக்கல் இடம் பெறுகின்றது. இதனால் எதிர்காலத்தில் நாம் பல இழப்புக்களை சந்திக்க வேண்டியேற்படும். இப்போது இரு சமூகமும் ஒனறு சேரந்து எமது தாயக பூமியை பாதுகாக்க முடியாது போனால் எதிர்காலத்தில் நாம் அனாதைகளாக மாறுவதை எவராலும் தடுக்க முடியாது.
சில சக்திகள் எம்மை பிரிக்க முற்பட்டாலும்,அந்த சதிகளின் வலையில் நாம் சிக்காது,எமக்குள் காணப்படும் முரன்பாடுகளை களைந்து அதனை உடன்பாடுகளாக மாற்றி இணைந்த தாயகத்தில் ஒற்றுமையாக வாழலாம்.
முஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர்கள் வாழந்த பல பிரதேசங்களுக்கு நாங்கள் சென்று அந்த மக்களின் துன்பங்களை கணடிருக்கின்றோம். எமது மக்கள் படும் துன்பங்களை தீர்ப்பதற்கு நாம் பிரிந்து அரசியல் செய்ய வேண்டிய நிலை தற்காலிகமாக ஏற்பட்டது. ஆனால் இன்று அதனை செய்ய முடியாது. தமிழர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்றால் அப்போது முஸ்லிம்களுக்கான தீர்வும் வழங்க்ப்ப்பட வேண்டும் என்பது உறுதியானது. அதனை அடைவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சுப் பதவி தடையாக இருக்கும் என நான் தெரிவித்து கொள்ளவிருமபுகின்றேன்.
இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் தமது மண்ணில் மீள்குடியேற வாருங்கள்,அது உங்களதும் தாயகம். வருகின்ற சவால்கள் குறித்து நாம் பேசி இந்த நாட்டில் எமது பலத்தை நிருப்பிப்போம். இந்திய வீடமைப்புத் திட்டம் இலங்கை கொண்டு வரப்பட்ட போது அதில் முஸ்லிம்களது பங்கு வழங்கப்படவில்லையென எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போது,அதற்காக நாம் இந்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி முஸ்லிம்களின் பங்கை சரியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க வேண்டியதை ஒரு போதும் நாம் பலவந்த்மாக தட்டிப்பரிக்க மாட்டோம். என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு கூறினார்.
''வேர் அறுதலின் வலி'' நூல் வெளியீட்டுக்கு செல்லுமாறு கூறிய சம்பந்தன்
வடக்கு முஸ்லிம்களின் 1990 அவலத்தை கவிதை வடிவில் ஆவணமாக்கும் நோக்குடன் யாழ் முஸ்லிம் இணையம் ஏற்பாடு செய்திருந்த ''வேர் அறுதலின் வலி'' நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அதீதியாக தமிழரசு கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தார். தமிழ் - முஸ்லிம் உறவின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றிய அவர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
இந்த நுல் வெளியீட்டுக்கு முன்னர் எனது கட்சியின் தலைவர் சம்பந்தன் அய்யா அவர்களிடம் இவ்வாறான ஒரு நிகழ்வுக்கு செல்லவுள்ளதாக கூறிய போது, நிச்சயமாக இந்த நிகழ்வுக்கு சென்று தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற செய்தியை சொல்லமாறு கேட்டுக் கொண்டதையும் இவ்வேளையில் நினைவுபடுத்துகின்றேன் என்றார்.
''வேர் அறுதலின் வலி'' நூல் வெளியீட்டுக்கு செல்லுமாறு கூறிய சம்பந்தன்
வடக்கு முஸ்லிம்களின் 1990 அவலத்தை கவிதை வடிவில் ஆவணமாக்கும் நோக்குடன் யாழ் முஸ்லிம் இணையம் ஏற்பாடு செய்திருந்த ''வேர் அறுதலின் வலி'' நூல் வெளியீட்டு விழா கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அதீதியாக தமிழரசு கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்தார். தமிழ் - முஸ்லிம் உறவின் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றிய அவர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது,
இந்த நுல் வெளியீட்டுக்கு முன்னர் எனது கட்சியின் தலைவர் சம்பந்தன் அய்யா அவர்களிடம் இவ்வாறான ஒரு நிகழ்வுக்கு செல்லவுள்ளதாக கூறிய போது, நிச்சயமாக இந்த நிகழ்வுக்கு சென்று தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்ற செய்தியை சொல்லமாறு கேட்டுக் கொண்டதையும் இவ்வேளையில் நினைவுபடுத்துகின்றேன் என்றார்.
இதை சொல்ல 22 வருடங்களும்,தலையும் சாக வேண்டும் போல.ஜெயிலில் நம்மவர்கள் போட்ட சாப்பாடு இன்னும் ருசிக்கிறது.இந்தளவாவது நினைத்து பேசியதற்கும், வேர் அறுதலின் வலி புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்ததற்கு நன்றியை தெரிவிப்பதோடு ,இஸ்லாத்தைப்பற்றியும் தெரிந்து கொள்ளுமாறும் வினயமுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ReplyDeleteMeraan