சிரியா மீது இராணுவ தாக்குதல் - பங்குகொள்ள பிரான்ஸ் தயார்...!
ஐ.நா.வின் ஆணைக் கிணங்க மட்டுமே சிரியா மீதான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்போமென பிரான்ஸ் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் சிரியா தொடர்பாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் வேஸ் லிடாரின் கருத்து தெரிவிக்கையில்,
சிரிய ஜனாதிபதி பஷார் அசாட் பதவி விலகுவதற்கு சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பதுடன் சர்வதேச சமூகம் அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். சிரியாவில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் , வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த சனிக்கிழமை, சிரிய போராளிகளுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குமாறும் பாதுகாப்பு உயர் வலயங்களை பிரகடனப்படுத்துமாறும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்திடம் அமெரிக்க செனட்டர் ஜோன் மைக்கைன் கேட்டிருந்தார்.
சிரியாவின் சினேக நாடான ரஷ்யா சிரியா மீதான ஐ.நா.வின் செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி , பிரான்சிஸ் ஹோலண்டுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலே இது தொடர்பான சந்திப்பொன்றும் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த டெரின் வீட்டோவை ரஷ்யா திங்கட்கிழமை விலகிக் கொள்வது சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment