Header Ads



பாலர் பாடசாலை வருடாந்த விழா

மொஹமட் ஹபீஸ்

பாலர்கல்வியில் விளையாட்டு முறைக் கல்வி மிக இன்றியமையாததாகும். விளையாட்டு மூலம்  சிறுவர்கள் புத்தூக்கம் அடைவதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்காவின் அந்தரங்கச் செயலாளர் திருமதி தமரா திசாநாயக்கா தெரிவித்தார்.

மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. இயக்கத்தினால் நடத்தப்படும் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மதீனா மத்திய கல்லூரி மைதானத்தில்(3.6.2012 மாலை) இடம் பெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிறுவயது முதல் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.அதற்கு மிக இலகுவான முறையாக கல்வியியலாளர்கள் முன்வைத்த முறைகளில் ஒன்றே இந்த விளையாட்டு முறையாகும்.  இன்றைய போட்டிகளில் பெற்றோரும் மிக ஆர்வத்துடன் காணப்பட்டனர். அப்படியாயின் குழந்தைகள் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? எனத் தெரிவித்தார்.

சிறுவர்களது உடற்பயிற்சிக் கண்காட்சி ஒன்று இடம் பெற்றதுடன் அதிதிகளால்  வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.








No comments

Powered by Blogger.