Header Ads



நைஜீரியாவில் கிறிஸ்த்தவ ஆலயங்கள் மீது தற்கொலை தாக்குதல் - 75 பேர் பலி

நைஜீரியாவில் சர்ச்கள் மீது  நடத்திய 3 தற்கொலைப்படை தாக்குதல்களில் 75 பேர் பலியாயினர். மேலும் 120 பேர் காயம் அடைந்துள்ளனர். கடுனா, சரியா போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சர்ச்கள் மீது சிறிய இடைவெளிகளிகளில் அடுத்தடுத்து இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

போகோ ஹரம் என்னும் இஸ்லாமிய இயக்கம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதுபற்றி பேசிய போகோ ஹரம் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அபு காகா, ‘கடுனா, சரியா பகுதிகளின் கிறிஸ்தவ சர்ச்களுக்கு எதிராக அல்லாஹ் எங்களுக்கு இன்று சிறந்த வெற்றியைக் கொடுத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

தனி இஸ்லாமிய மாநிலம் கோரி போகோ ஹரம் இயக்கத்தினர் நைஜீரியாவின் பொது இடங்களிலும், சர்ச்களிலும் சமீபகாலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தனி மாநிலம் ஏற்படுத்தித் தராத காரணத்துக்காக பல அரசியல்வாதிகள் மற்றும் முஸ்லிம் மத தலைவர்களை போகோ ஹரம் இயக்கத்தினர் கொன்றுள்ளனர்.

3 comments:

  1. இஸ்லாத்தின் பெயரால் வெறியாட்டம் போடும் காட்டுமிராண்டிகள்.யார்,யாருடன் யுத்தம் செய்யவேண்டும் என்று
    இஸ்லாம் அழகாக சொல்லியிருக்கிறது.வயோதிபர்கள் ,சிறுவர்கள்,பெண்கள்,நோயாளிகள் இவர்கள் தவிர்ந்த ஆயுதம் தரித்தவர்களுடன் தான் போர் செய்யவேண்டும்.என்றுதானே இஸ்லாம் சொல்லுகிறது.இந்த அடிப்படை கூட தெரியாத இஸ்லாமிய?போராளிகலாம்.பைத்தியக்கார ஜென்மங்கள்.ஏற்கனவே சூடானை இரண்டாக பிரித்து விட்டார்கள்
    அடுத்தது நைஜிரியாதான்.இந்த காட்டுமிராண்டித்தனத்தை தானே மார்க்கம் இல்லாத புலிப் பயங்கரவாதிகள் செய்தார்கள்.இதற்கு எதிராக குரல் கொடுத்த அனைத்து உலக முஸ்லீம்களும்,இயக்கங்களும்,இஸ்லாத்தின் பெயரால்கிருஸ்தவ மக்களுக்கு எதிராக ஆடிய வெறியாட்டத்தையும் மனப்பூர்வமாக கண்டித்து மன்னிப்பு கேட்டு
    தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தான் சார்ந்த இன, மதத்தை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் நீதியை நிலைநாட்டத்தான் இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
    Meraan

    ReplyDelete
  2. இவர்களுடைய்ய செயல் காட்டுமிராண்டிகளை விட மோசமானது இஸ்லாத்தை இழிவு படுத்துவதற்காக இப்படியான செயல்களை செய்கிறார்கள் இந்த செயலினால் எத்தனை அப்பாவிகள் இறந்து இருப்பார்கள் சுபகனல்லாஹ் இறந்தவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் முறை இடுவார்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் இந்த காட்டுமிராண்டிகள் முடியுமான வரை கண்டனங்களை பதிவு செய்யுங்கள்
    ரியாஸ்

    ReplyDelete
  3. Bogo harm iyakkam haraamana iyakkam intha payankaravathikalai Allah poondodu alippanaga naragattin viragu kaddaikal.saleem

    ReplyDelete

Powered by Blogger.