கியூபாவில் புரட்சியாளன் சேகுவேராவின் மனைவியை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஸ
கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, புரட்சித் தலைவர் சேகுவேராவின் மனைவியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு ஹவானா நகரிலுள்ள அவரது வீட்டில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக செயலாளர் விஜயானந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது இருவருக்கும் இடையில் நட்பு ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment