Header Ads



மியன்மாரில் மோதல் - பௌத்தர்களினால் 10 முஸ்லிம்கள் பஸ்ஸிற்குள் வைத்து படுகொலை


மியன்மாரில் பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில்  8 பேர் பலியானதுடன் 17 பேர் காயமடைந்ததையடுத்து அந்நாட்டின் மேற்குப் பகுதியில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அதே சமயம் இதன் அடிப்படையில் வன்முறைகள் ஜனநாயகத்தை நோக்கிய மியன்மாரின் ஆட்சி மாற்றத்தை நெருக்கடிக்குள்ளாக்குமென அந்நாட்டின்  ஜனாதிபதி தெயன் செய்ன் எச்சரித்துள்ளார்.

பௌத்த மதத்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான சொத்துகள் சேதமடைந்துள்ளன. முஸ்லிம்கள் பயணித்த பஸ் ஒன்றின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து  பௌத்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்தே மியன்மாரில் பௌத்தர்களுக்கும்  முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இவ் வன்முறைச் சம்பவங்களை அடுத்து இவ்வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரான பிரிட்டன் கூறியுள்ளது. மியன்மாரில் தற்போதைய நிலைவரம் தொடர்பாக தாம் கவலையடைவதாக  கூறியுள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி பிரௌண் கூறியுள்ளார்.பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மியன்மார் நிலைவரம் தொடர்பாக மிகவும் கூர்ந்து கவனிப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையின் கீழ் பிராந்தியத்தின் நிர்வாகத்தினை இராணுவத்தினர் உடனடியாக கைப்பற்றிக் கொள்ள முடியும்.

குழப்ப நிலைமை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்வதற்கும் மக்களின் பாதுகாப்பினையும் ஸ்திரத் தன்மையையும் உடனடியாக மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமான அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.

ஜூன் முற்பகுதியில் 10 முஸ்லிம்கள் பஸ் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குழப்பநிலை அதிகரித்துக் காணப்படும். அரகன் மாநிலத்திலுள்ள 4 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறைகளில் ஈடுபடும் முஸ்லிம்களும், பௌத்தர்களும் பரஸ்பரம் இருதரப்பினரதும் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.


2 comments:

  1. This is the supper chance to give wider focus on muslims problem for Islam Protecters. this is a good chance to expand their network from Arabian Penninsula,Africa,Central Asia,

    ReplyDelete
  2. our muslim socity must help this situation

    ReplyDelete

Powered by Blogger.