Header Ads



பிரிட்டன் பிரதமருக்கு ஏற்பட்ட ஆதிர்ச்சி...!


விருந்து ஒன்றில், குடும்பத்துடன் கலந்து கொண்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், தன் மகளை அங்கு தவறவிட்டுவிட்டார். அதன் பின், அவரே சென்று, மகளை அழைத்து வந்துள்ள விஷயம், தற்போது தெரிய வந்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன். இவரின் மனைவி சமந்தா. இவர்களுக்கு, எட்டு வயதில் நான்சி என்ற மகளும், ஆர்தர் என்ற ஆறு வயது மகனும், பிளாரன்ஸ் என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன், பங்கிங்காம் ஷயர் பகுதியில் உள்ள ஓட்டலில் நடந்த விருந்தில், டேவிட் கேமரூன், குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஒரு மணி நேரம் இவர்கள் அங்கு தங்கியிருந்தனர்.வி.ஐ.பி.,க்கள் பலர் வந்திருந்ததால், அவர்களுடன் கேமரூன் பேசிக்கொண்டிருந்தார். நேரமாகிவிட்டபடியால், தன் பாதுகாவலர்கள் புடை சூழ, ஒரு காரில் புறப்பட்டு, வீடு சென்றார்.

மற்றொரு காரில், இவரின் மனைவியும் குழந்தைகளும் வந்தனர்.பெரிய மகள் நான்சியை, கணவர் அழைத்து சென்றிருக்கிறார் என நினைத்து, மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார் மனைவி சமந்தா.

மனைவியுடன் மகள் நான்சி வருவதாக நினைத்து, முதல் காரில் சென்று கொண்டிருந்தார் கேமரூன்.வீட்டுக்கு சென்ற பின் தான், மகளை ஓட்டலில் தவறவிட்டது, இந்த தம்பதிக்கு தெரிய வந்தது. பதறிப் போன அவர்கள், உடனடியாக, அந்த ஓட்டலுக்கு போன் செய்து, தன் மகள் குறித்து விசாரித்தனர்.அங்கு, நான்சி, சமர்த்தாக விளையாடிக் கொண்டிருப்பதை கேட்டு நிம்மதியடைந்த கேமரூன், உடனடியாக காரை எடுத்துக் கொண்டு, அந்த ஓட்டலுக்கு சென்று, மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.இந்த விஷயம், எப்படியோ வெளியே கசிந்து, தற்போது எல்லாருக்கும் தெரிந்து விட்டது.

No comments

Powered by Blogger.