பல்கலைக்கழகங்களில் காதலிக்கும் பெண்களுக்கு கன்னித் தன்மை சோதனை..?
பல்கலைக்கழகங்களில் காதலிப்பதும் தற்போது ஒழுக்க விரோத செயற்படாக மாற்றப்பட்டுள்ளது எனவும் காதலித்தால் பெண்ணின் கன்னித் தன்மை சோதனை செய்யப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழங்கள் என்பது ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் இல்லை. அவை மாணவர்கள் கேந்திர கல்வி நிறுவனங்கள். இதனால் மாணவர்களை பலவந்தமாக விரிவுரைகளில் கலந்துக்கொள்ள செய்யக் கூடாது. மாணவர்கள் தேவையான அறிவை தேடுவதற்காக வழிகாட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விரிவுரைகளில் 80 வீதம் கலந்துக்கொள்ளாத மாணவர்கள் மற்றும் ஒழுக்கமின்றி செயற்படும் மாணவர்களுக்கு மாபொல புலமைப்பரிசில் வழங்கப்பட மாட்டாது என உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே சஞ்சீவ பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார் gtn.

பொது மக்களின் காசில் கூத்தடித்துக் கொண்டிருக்கும் இவர்களெல்லாம் பெரிய மனுசர்களாம்,
ReplyDeleteஅமைச்சின் அறிவிப்பில் எந்த தவறும் இல்லை.
பல்கலைக் கழகங்கள் விபச்சாரம் செய்வதற்கும், வீதி மறியல் செய்வதற்கும் பயிட்ச்சியளிக்க
உருவாக்கப் படவில்லை என்பதை அண்ணருக்கு சொல்லி வையுங்கள்.
கல்வி அமைச்சர் எடுத்த முடிவு மிக சரியானது.அரசை நஷ்டமாக்கி படிப்பு என்ற பெயரில் நீங்கள் அங்கு கூத்தடிக்க தேவை இல்லை.உங்களின் சங்க சக்தியை நல்ல விடயங்களுக்கு மாத்திரம் பாவிக்கவேண்டும்.அதனை எல்லா நாட்டின் முடிவுகளிலும் பாவிக்க முடியாது.பல்கலைக்கழகம் என்றால சமுகத்தில் ஒருவிதமான சந்தேகப்பார்வை பெண்களை நோக்கி உள்ளது,காரணம் அது மிக சீரழிந்த கலாச்சாரமாக மாறியுள்ளது மட்டுமல்ல,அது ஒழுக்கமான தமிழ் முஸ்லிம் மாணவர்களையும் ரொம்ப பாதித்துள்ளது.இதனால்தான் முதல் கட்டமாக அரசு எடுத்த முடிவான பட்டதாரி நியமனங்களை நிறுத்துவது என்பதை உடனடியாக நாட்டின் நலன் கருதி அமுல்படுத்தவேண்டும்.தொழிலுக்காக படிப்பு என்பதால் எத்தனை பட்டம் பெற்றாலும் இன்று மனித நேயங்களை விழுமியங்களை காணமுடியவில்லை.
ReplyDelete