Header Ads



தமது தாயகத்தில் மீளக்குடியேறும் முஸ்லிம்களை தவறாக நோக்காதீர்கள் - அமைச்சர் றிசாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார் மாவட்டத்தில் வெளியார் எவரும் குடியேற்றப்பட மாட்டார்கள், ஆனால் இங்கு வாழ்ந்த மக்கள் எவராக இருந்தாலும் அவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு உரிமையுண்டு என் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன், எமது மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று பேசினால் எமக்கெதிரான விமர்சனங்களையும்,பிழையான இனவாத சிந்தனைக் கருத்துக்களையும் சிலர் வெளியிடுகின்றனர் என்றும் கூறினார்.

மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட சின்ன வலயன்கட்டு, விளாத்திக்குளம், தம்பன்னைகுளம் ,முல்லிக்குளம், கட்டையடம்பன், பாலம்பிட்டி,இரணை இலுப்பக்குளம் காக்கையன்குளம் பாடசாலைக்கான கட்டிடங்கள் ,கமநல சேவை நிலையங்கள் மற்றும் களஞ்சயி சாலைகள் என்பனவற்றை திங்கட்கிழமை(14) திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில்,

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில்மீள்குடியேற வந்தால் அவர்களை வேறுமாவட்ட மக்கள் போன்று பார்க்கும் நிலையேற்படுத்தப்பட்டுள்ளது. இது பிழையான முறையாகும். அவர்களும் வடமாகாணத்தில் சகல உரிமைகளையும் கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எம்மை பொறுத்த வரையில் சகலரும் சம்மானவர்கள் ,அவர்களது தேவைகள்,உரிமைகள் என்பன உரிய முறையில் நோக்கப்பட வேண்டும என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

எந்த சமூகத்தையும் குறைத்து நாம் மதிப்பிட வேண்டிய தேவையில்லை.இன்று வடமாகாணத்தில் 20 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.மன்னாரில் 16 ஆயிரம் குடும்பங்களும்,வ்வுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழப்பாணம் ஆகிய மாவட்டங்களில் எஞ்சிய தொகையினரும் மீள்குடியேறியுள்ளனர்.

இன்னு ஆயிரக்கணக்கான குடும்பங்க்ள ஆர்வத்துடன் உள்ளனர்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளின்மையே அந்த மீள்குடியேற்ற்த்துக்கு தடையாகவுள்ளது.

இன்று எம்மால் மக்களுக்காக செய்யப்படுகின்ற பணிகளை இனவாத சாயத்தை பூசி எமக்கு எதிரான போக்கை கொண்டுள்ளனர்.மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட வேண்டும் என்று நிணைக்கும் சக்திகளே இதனது பின்னணியில் அருப்பதை காண்முடிகின்றது.எமது மாவட்டத்தில் வெளி மாவட்டத்த்தை சேர்ந்த எவரும் குடியேற்ப்படவில்லை,அப்படி செய்யும் என்னமும் எமக்கில்லை என்பதை தெளிவாக சொல்ல விரும்பகின்றேன்.

அபிவிருத்தி என்று வருகின்ற போது அது சகலருக்கும் பொதுவானது.இம்மாவட்டத்தில் வழும் சகல சமூகங்களும் அதனை அனுபவிக்க வேண்டும் என்பது எமது ஆசையாகும்.அதற்காக வேண்டிய அர அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும திட்டங்களுக்கு உடனடியான அனுமதியினை வழங்குகின்றோம்.எமது மாவட்ட மக்களது உறவு எமக்கு மகிவும் தேவையானது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம் என்பதை சுட்டிக்காட்ட விரும்பகின்றேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.குரூஸ் தலைமையில இடம் பெற்ற இந்த்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,மன்னார் அரசாங்க அதிபர் ரவீந்திர ,மற்றும் பங்குத் தந்தை செபமாலை அடிகளார் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.








2 comments:

  1. சிறந்த கருத்துக்கள்
    வாழ்த்துக்கள் உங்களது சேவைக்கு
    அஷீன்
    மருதமுனை

    ReplyDelete
  2. முஸ்லிம் தலைவர்களே !அதிகாரிகளே !உலமாக்களே !எந்த அரச நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது பொது
    நிகழ்ச்சியாக இருந்தாலும் தயவு செய்து நிகழ்ச்சி நிரல் தயாரிப்பவர்களிடம் எங்களுக்கு மாலை,பூச்செண்டு
    மரியாதைகள் தேவையில்லை எங்கள் கடமையை நாங்கள் வந்து செய்கிறோம் என கூறிவிடுங்கள் .
    ஏனெனில் பிணங்களுக்குத் தானே மாற்று மதத்தவர்கள் மரியாதை நிமித்தம் மாலை சாத்துவார்கள் .நம்மவர்களை
    கழுத்தில் மாலையுடன் பார்க்கும்போது வேள்விக்கு பலி கொடுக்க அழைத்துப் போவது போல் இருக்கிறது .
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.