Header Ads



அமீருல் முஃமின் என்று கூறியவருக்கு 10 வருட சிறைத் தண்டனை

தன்னை நம்பிக்கையாளர்களின் தலைவர் என்றும், புதிய இறைத்தூதர் என்றும் பிரகடனப்படுத்தி கொண்டவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குவைத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்நபர் குவைத்தியர் அல்ல என்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் குவைத்தில் உள்ள அனைத்து சமூக, மத அடிப்படைகளில் இருந்தும் வெளியேறி தன்னை தூதராக ஏற்றுக் கொள்ளும் புதிய அமைப்பில் சேருமாறு பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் துவைம் அல் முஜைரியும் ஆதில் அப்துல் ஹையும் தொடந்த வழக்கில் ஆஜரான அந்நபர் தன்னை அமீருல் முஃமின் - நம்பிக்கையாளார்களின் தலைவன் என்றும் முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைவரும் தன்னை அவ்வாறே ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் சவூதி அரேபியாவிலும் தனக்கு ஆதரவாளர்கள் உண்டு என்றும் கூறியுள்ளார்.

அந்நபர் ஏற்கனவே சவூதி அரேபியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் அங்கிருந்து தப்பி குவைத்திற்கு வந்தவர் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.