'நாய் இறைச்சி சாப்பிடு' - 23 வயது இலங்கை சகோதரிக்கு மலேசியாவில் கொடூரம்
மலேசிய கோலாலம்பூரில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண் ஒருவர் தான் பணிபுரியும் வீட்டு உரிமையாளரால் எச்சில் உணவு மற்றும் நாய் இறைச்சி என்பவற்றை உண்ணுமாறு வற்புறுத்தி துன்புறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது வீட்டு உரிமையாளர் சூடான சமையல் பாத்திரங்களால் தனது கையில் சூடு வைத்துள்ளதாக 23 வயதான இலங்கை பணிப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கென குறித்த இலங்கை பணிப்பெண் டன்காக் பகுதிக்குச் சென்று அங்குள்ள தனது சகோதரியிடம் உதவி பெற்றுள்ளார்.
கடந்த ஒக்டோர் மாதம் மலேசியாவிற்கு சென்ற இலங்கை பணிப்பெண் அங்கு சென்று மூன்று வாரங்களின் பின் வேலையில் இணைந்துள்ளார்.
தனது வீட்டு உரிமையாளருக்கு இரண்டு வீடுகள் இருப்பதாகவும் அவ்விரு வீடுகளையும் சுத்தப்படுத்தும்படி தான் பணிக்கப்பட்டதாகவும் இலங்கை பணிப்பெண் கூறியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த இலங்கை பணிப்பெண்ணின் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாவும் அப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் கோலாலம்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment