'சமகால முஸ்லிம் அரசியல் சவால்கள்' - ஒருநாள் செயலமர்வு
தகவல் உதவி - Inamullah Masihudeen
"சமகால முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பங்களும் சவால்களும், அடைவுகளும், பின்னடைவுகளும்'' பட்டதாரிகள், பல்கலைகழக மாணவர்களுக்கான ஒரு முழு நாள் செயலமர்வும் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது.
பங்கு கொள்ள விரும்புபவர்கள் விபரங்களுடன் மின் அஞ்சல் மூலம் மாத்திரம் தொடர்புகொள்ளமுடியும்.
உங்கள் முகவரி மற்றும் தொலை பேசி இலக்கங்களை தவறாது குறிப்பிடவும். சான்றிதழ் மற்றும் ஆவணங்களும் வழங்கப்படும். slcgksa@gmail.com CENTRE FOR MUSLIM POLITICAL STUDIES – COLOMBO 12
இச்செயலமர்வில் அரசியல் தீர்வு முயற்சிகள் குறித்த நமது நிலைப்பாடு, முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சிவில் நிர்வாக பிரச்சினைகள், உள்ளூராட்சி நிர்வாகப் பிரிவுகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் இவற்றை அடிப்படியாக கொண்டெழும் சமூக பொருளாதார பிரச்சினைகள், இருப்புக்கும் பாதுகாப்பிற்கும் விடுக்கப்படுகின்ற சவால்கள், சம உரிமைகளுக்குகேதிராக எழும் புதிய சவால்கள், கல்வி தொழில் வாய்ப்புகளில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தி, உட்கட்டமைப்பு சார் பிரச்சினைகள் என பல்வேறு கோணங்களில் ஆராயப்படவுள்ளது.
முஸ்லிம் சிவில் அரசியல் தலைமைகளுக்கான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை இனம் காணுதல், இளைஞர்களுக்கான மாதிரி மாகாண சபை, மாதிரி உள்ளூராட்சி மாநகராட்சி சபைகள், மாதிரி பாராளுமன்றம் ஆகியவற்றை தோற்றுவித்து புதிய தலைமுறையினருக்கான தலைமைத்தவப் பயிச்சிகளை அளித்தல், அவற்றின் நிலையியற் கட்டளைகள்,மரபுகள், அரசியல் யாப்பு ,அதன் மீது மேற்கொள்ளப் பட்ட திருத்தங்கள், இனத்துவ அரசியல் வரலாறு, தேசிய பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்த தெளிவுகளை பெற்றுக் கொடுத்தல் என பல்வேறு பரிமாணங்களில் முஸ்லிம் அரசியல் ஆய்வுகளுக்கான மையம் மேற்கொள்ளும்.

Post a Comment