இங்கிலாந்தில் இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் - இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக, வரலாறு ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படுகிறது
எஸ் எல் எம் எஸ் யுகே (SLMS UK) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஐந்தாவது முறையாகவும் லெஸ்டர் மாநகரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இம்முறை பிரதான அதிதிகளாக இலங்கை தூதுவர ஆலயத்தின் தூதுவர்கள் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் என பல விசேட அகதிகளோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் குடும்ப சகிதமாக இந்த நிகழ்ச்சிகளிலே பங்கேற்கவுள்ளனர் .
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு என்ற ஆவணப்படம் ஒன்று இம்முறை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியிலே ஆவணப்படுத்தப்பட இருக்கிறது. இது பிரித்தானியாவில் ஆவணப்படுத்தப்பட இருக்கும் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் . விசேட பிரதி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த முஸ்லிம்களின் வரலாற்று ஆவணப்படம் ஆவணப்படுத்தப்படும் அது மிக விசேட அம்சமாக இந்நிகழ்ச்சியிலே பார்க்கப்படுகிறது
லெஸ்டர் வாழ் முஸ்லிம் சகோதரர்கள் குடும்ப சகிதமாக இந்நிகழ்வில் பங்கு கொண்டு இந்நிகழ்வையை மேலும் சிறப்பாக்குமாறு எஸ் எல் எம் எஸ் யு கே SLMS (UK )அமைப்பு வேண்டிக் கொள்கிறது.
தகவல் : ஹிஷாம்
Post a Comment