Header Ads



காத்தான்குடியில் அதிகாலை, நிகழ்ந்த 2 சம்பவங்கள்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட காத்தான்குடி நகரில் புதன்கிழமை (07) அதிகாலை இரு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 


காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர் குறித்த இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எறிந்து சாம்பலாகியுள்ளது


இதேவேளை காத்தானகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த கனரக லொறியொன்று பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு பாடசாலை திடீரென உள்ளது இதனால் பாடசாலையின் முன் பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது இந்த இரு சம்பவங்களால் சற்று பதற்றநிலைமை ஏற்பட்டு, சிறிது நேரத்தில் தணிந்தது.


இது இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.