மதிய உணவில் பாம்பு - 100 மாணவர்கள் பாதிப்பு
இந்தியாவின் - பீகார் மொகாமா நகர பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 100 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டது, இதனை இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரித்து வருகிறது.
அந்த உணவை பரிசோதனை செய்ததில், அதில், இறந்த பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது. சமையல்காரர் இறந்த பாம்பை அதிலிருந்து அகற்றிய போதிலும் மதிய உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தெரிவித்துள்ளது.
மாணவர்கள் நோய்வாய்ப்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
Post a Comment