Header Ads



பலஸ்தீன சார்பு அரசாங்கம் இலங்கையில் நிறுவப்படும் - இம்தியாஸ் Mp வீட்டில், முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களை சந்தித்த சஜித்



- AA. Mohamed Anzir -


தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான துருக்கி தூதுவர் ரகிபே டிமெட் செகெர்சியோக்லுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தனது இல்லத்தில் பிரியாவிடை இராபோசன விருந்துபசாரமளித்தார்.


இந்த விருந்துபசாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பஹீமுல் அஸீஸ், இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் தாரிக் எம் டி அரிபுல் இஸ்லாம், இலங்கையிலுள்ள பலஸ்தீன தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட், இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் ஜாசிம் அல் சொரூர், இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களுடன்,  நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.


ஒருகட்டத்தில் கருத்துரைத்த சஜித் பிரேமதாசா, தனது தலைமையில் புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதும், அது பலஸ்தீன சார்புடையதாக  அமையுமென்று குறிப்பிட்டார்.


குறித்த நிகழ்வில், குவைத் தூதுவர் வெளிநாட்டில் இருந்தமையால் பங்கேற்கவில்லை. கலாநிதி ஹர்ச டி. சில்வா வெளி மாவட்டத்தில் இருந்தமையால், கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.